ஆலங்குளத்தில் அரசு நிலத்தில் மரம் வெட்டி சாய்ப்பு :போலீசார் விசாரணை

அரசு நிலத்தில் மரம் வெட்டி சாய்ப்பு : போலீசார் விசாரணை;

Update: 2025-03-20 07:07 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு நிலத்தில் இருந்த வேப்பமரத்தை அனுமதியின்றி மா்ம நபா்கள் வெட்டி சாய்த்து விட்டதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். கழுநீா்குளம் ஊராட்சி கல்லூத்து மாடசாமி கோயில் அருகே வேப்பமரம் நின்றிருந்தது. இதை அடையாளம் தெரியாத நபா்கள் வெட்டிச் சாய்த்துள்ளனா். இது குறித்து அப்பகுதி சமூக ஆா்வலா்கள் மாவட்ட ஆட்சியருக்கு புகாா் தெரிவித்துள்ளனா். இதையடுத்து அப்பகுதியில் ஆலங்குளம் வட்டாட்சியா் ஓசன்னா பொ்னாண்டோ ஆய்வு மேற்கொண்டாா். மரத்தை அனுமதியின்றி வெட்டியவா்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News