ராமநாதபுரம் அரசு பள்ளி கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா நடைபெற்றது

ராமநாதபுரம் அருகே தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா நடைபெற்றது. பெற்றோர்கள் வரவேற்பு;

Update: 2025-03-20 10:48 GMT
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் அமைந்துள்ளது திருப்பாலைக்குடி அரசு தொடக்கப்பள்ளி இந்த கிராமப்புற மாணவர்களின் அறிவியல் திறனை வெளிப்படுத்தும் நோக்கத்தில் அறிவியல் கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டது அனைத்து பொதுமக்கள் பெற்றோர்களின் கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டு அறிவியல் கண்காட்சி அரசு பள்ளியில் நடைபெற்றது. இதனால் மாணவர்களின் அறிவியல் ஆர்வம் மற்றும் அவர்களே அறிவியல் படைப்புகளை தயார் செய்வதன் மூலம் மிகுந்த ஆர்வம் காணப்பட்டது. கற்றலின் மூலம் கற்பதை காட்டிலும் அவர்களே நேரடியாக படைப்புகள் தயார் செய்வதால் நினைவு ஆற்றல் ஏற்படுகின்றன. கிராமப்புற மாணவர்களுக்கும் அறிவியலில் ஆர்வம் காணப்படுகின்றன. இதன் மூலம் பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது போன்று ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். இந்த ஆண்டு 60-க்கும் மேற்பட்ட படைப்புகளை செய்து வந்தனர். அதில் குறிப்பாக காற்றாலை மூலம் மின்சாரம் தயாரித்தல்‍, மழைநீர் சேகரிப்பு, கப்பல், இரவு பகல் தோன்றுதல், நுரையீரல் மூலம் சுவாசித்தல், போக்குவரத்து விதிமுறை காப்பது போன்றவை சிறப்பு பெற்றன. இதேபோல் உணவு திருவிழா நடைபெற்றது. அதில் உண்ணக்கூடிய பொருட்கள், உண்ணக்கூடாத பொருட்கள், சிறுதானிய உணவு பொருட்கள், சுவைகளின் வகைகள், முளைக்கட்டிய தானிய வகைகள், கடல் வாழ் உணவுகள், இயற்கை உணவுகள், கீரை வகைகள், பழங்கள் காய்கறிகள், பச்சை காய்கறிகள் போன்றவைகளை பெற்றோர்கள் ஆர்வத்துடன் செய்து கொடுத்து காட்சிப்படுத்தப்பட்டன. அருகில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். மாணவர்களின் ஆர்வம் மற்றும் பெற்றோர்களின் ஊக்கம் மாணவர்களை மேலும் உற்சாகப்படுத்தினர். இது போன்று ஆண்டுதோறும் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கைகளையும் வைத்தனர். இவ்விழா அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றன.

Similar News