ராமநாதபுரம் சமூக நல்லிணக்க நோன்பு நடைபெற்றது
சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி: அனைத்து சமுதாய மக்கள் கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை செய்தனர்;
ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினத்தில் ஆலிம் நகர் புதிய பள்ளி வளாகத்தில் எஸ்டிபிஐ கட்சி ஜிபி கமிட்டி சார்பாக அதன் தலைவர் நசீர் மைதீன் தலைமையில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்கள் நலனுக்காகவும் ஒற்றுமையோடு வாழ்வதற்கும் நாட்டின் நடக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் இருக்கு தீர்வு ஏற்றுவதற்கும் மக்கள் அனைவரும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் நோய் இல்லாமல் வாழ்வதற்கு கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது. நோன்பு திறப்பதற்கு உண்டான பழங்கள் பேரிச்சம் பழங்கள் உடலைக் குளிரூட்டும் வகையில் சர்பத்துகள் கஞ்சிக்கு ஏற்ற வகையில் பலகாரங்கள் வைத்திருந்தனர். சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில் அனைவரும் நோன்பு கஞ்சி குடித்து நோன்பு திறந்தனர். சுற்றியுள்ள கிராமத்தின் சமுதாயம் தலைவர்கள் அனைத்து கட்சிகள் நிர்வாகிகள் சமுதாய இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் அனைத்து சமூக சமுதாய மக்கள் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. பெரியபட்டினம் பொதுமக்கள் மற்றும் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் ஆண்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.