செண்டங்காடு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கல் 

வேளாண் செய்திகள்;

Update: 2025-03-20 11:29 GMT
தஞ்சாவூர் ஆர்‌.வி.எஸ் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள், கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் துவக்க விழா, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே செண்டங்காடு கிராமத்தில்  பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் (பொ) ச.சன்மதி தலைமையில் நடைபெற்றது.  முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எல்.கோவிந்தராசு,  சி.கலியமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.கல்யாண சுந்தரம், இயற்கை விவசாயி குமரச்சந்திரன் உள்ளிட்ட முன்னோடி விவசாயிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.  இதில், பட்டுக்கோட்டை வேளாண் ஆராய்ச்சி நிலையம் உதவிப் பேராசிரியர் ஆர்.ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இவ்விழாவில், கலந்து கொண்ட விவசாயிகளுக்கு 100 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Similar News