காலை உணவு திட்டத்தல் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட ஆட்சியர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஓட்டு திட்டத்தில் பல்வேறு அரசியல் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் அதன் ஒரு பகுதியாக காலை உணவு திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவை மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.;

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் முகாமிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண தமிழ்நாடு முதலமைச்சர் அவரால் அறிவிக்கப்பட்ட “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஒவ்வொரு மாதமும், ஒரு வருவாய் வட்டத்தில் நடைபெற வேண்டும் என்பதன் அடிப்படையில் இன்றைய தினம், திருவாரூர் மாவட்டத்தில் 2025 மார்ச் மாதத்திற்கான முகாம் திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் 19-03-2025 காலை 9.00 மணி முதல் 20-03-2025 காலை 9.00 மணி வரை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அவர்கள் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டதுடன், அனைத்து அரசு துறை உயர் அலுவலர்களும் வருவாய் வட்டத்தில் கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி தகுதியான மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குடவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் குறித்து அறிய பள்ளி மாணவ, மாணவியர்களுடன் அமர்ந்து காலை உணவினை மாவட்ட ஆட்சித்தலைவர் உட்கொண்டு ஆய்வு மேற்கொண்டார். இவ்ஆய்வில், அனைத்து துறை அரசு உயர் அலுவலர்களும் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் முகாமிட்டு மக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தனர்.