ராமநாதபுரம் ஏதாவது புத்தகத் திருவிழா துவக்கம்
புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்;
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முகவை சங்கம், மாவட்ட நிர்வாகம் பள்ளிகல்வித்துறை பொது நூலக இயக்கம்,மற்றும் கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் இணைந்து நடத்தும் இந்த புத்தக திருவிழாவானது பத்து நாட்களுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு நடைபெறும் இந்த 7-வது புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். இதில் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்று சிறப்பித்தனர் முன்னதாக மாவட்ட ஆட்சியரை தமிழர்களின் பாரம்பரிய கலைகளாக கரகாட்டம், மயிலாட்டம்,சிலம்பாட்டத்தின் மூலம் மாணவர்கள் வரவேற்று தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அமைக்கப்பட்டிருந்த புத்தக அரங்கையும் பார்வையிட்டார். பின்னர் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த புத்தகப் பிரியர்கள் பலரும் கலந்துகொண்டு காட்சிப்படுத்தப்பட்ட புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.