மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா வாலிபால் போட்டிகள் துவக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா வாலிபால் போட்டிகள் துவக்கம்;

Update: 2025-03-21 13:49 GMT
திருச்செங்கோட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான பாரா வாலிபால் போட்டிகள் துவங்கின.16 மாநிலங்களைச் சேர்ந்த ஆண்கள் அணியினர் மற்றும் 9 மாநிலங்களைச் சார்ந்த பெண்கள் அணியினர் என மூன்று நாட்கள் லீக் முறையில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பல்வேறு தரப்பில் போட்டிகள் இருந்த போதும் நமது பகுதியில் இந்த போட்டி நடக்க வேண்டும் என வாதாடி அனுமதி பெற்று வந்தோம் இதுகுறித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி அவர்களை சந்தித்து கூறிய போது எங்களை பாராட்டி சிறப்பாக நடத்துங்கள் என வாழ்த்தினார் தமிழ்நாடு அரசு ஊனமுற்றவர்கள் என்று அழைக்கப்பட்டு வந்தவர்களை மாற்றுத்திறனாளிகள் என பெயர் மாற்றம் செய்ததோடு பல்வேறு உதவிகளை பல்வேறு திட்டங்கள் மூலம் செய்து வருகிறது தமிழக வீரர்களுக்கு இந்த போட்டிகள் மூலம் வேலை வாய்ப்புகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.தான் துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து தேசிய அளவிலான நிகழ்ச்சி குறித்து கூறிய போது அவர் கனிவுடன் அத்தனை பணிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா வாலிபால் குறித்து விசாரித்தார் எனவும்... நாமக்கல் பகுதியில் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள் என தெரிவித்தார் எனவும் ஆனால் நாமக்கல்லில் மாவட்ட ஆட்சியர் உமாவை தவிர , நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் KRN ராஜேஷ்குமார் மற்றும் அமைச்சர் மதிவேந்தன் , கொமதேக MP மாதேஸ்வரன் என இவர்களிடம் தேசிய அளவிலான நிகழ்ச்சி குறித்து கூற சென்ற போது அவர்கள் அது குறித்து கேட்க கூட நேரம் இல்லாத நிலை இருந்தது போட்டி தொடங்கி இது நாள் வரை கூட அவர்கள் தேசிய அளவிலான நிகழ்ச்சிக்கு என்னவென்று கூட கேட்டு அக்கறை காட்டவில்லை எனவும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவியதாகவும் மாற்றுத்திறனாளிகள் கண்டிப்பாக மதிக்கப்பட வேண்டும் என வேதனையுடன் தமிழ்நாடு பாரா வாலிபால் அசோசியேசன் மாநிலத் தலைவர் மக்கள் ராஜன் பேட்டியில் தெரிவித்தார்.

Similar News