கண்டாங்கொல்லையில் நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
கண்டியங்கொல்லை கிராமத்தில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்;
அரியலூர், மார்ச் 22- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், உதயநத்தம் ஊராட்சி, கண்டியங்கொல்லையில்,திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் & ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும், நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாமினை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) தி.குணசேகரன்,நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் சி.வடிவேல்,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மா.ஜெயா,பள்ளி தலைமையாசிரியர் க.பரமசிவம்,திமுக மாவட்ட பிரதிநிதி கோவி.சீனிவாசன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் க.சம்மந்தம். த.குணசீலன்,அ.தங்கபிரகாசம் மற்றும் இருபால் ஆசிரியர்கள்,கிளை கழக நிர்வாகிகள்,மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.