ராமநாதபுரம்அமிர்தா பள்ளியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது
அமிர்த வித்யாலயம் பள்ளியில் பட்டமளிப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது;
ராமநாதபுரம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் பட்டமளிப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவினை சிறந்த முறையில் நடைபெறுவதற்கு பள்ளி மேலாளர் பிரம்மச்சாரிணி லெட்சுமி அம்மா அவர்கள் ஏற்பாடு செய்து கொடுக்க, பள்ளி முதல்வர் திருமதி கோகிலா மற்றும் பள்ளித் துணை முதல்வர் பாலவேல் முருகன் அவர்கள் தலைமையில் விழாவானது வெகு விமர்சியாக நடைபெற்றது. இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் காவல்துறை ஆய்வாளர் திருமதி கே.பொன்தேவி எம்.ஏ (குற்றவியல்) அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் மற்றும் பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில் அமிர்தா பள்ளியானது கலைகளை வளர்க்கும் நோக்கிலும், குழந்தைகள் மொபைல் போன்கள் பார்ப்பதினால் ஏற்படும் சிக்கல்களையும் பாதிப்புகளையும் விரிவாக விளக்கினார். அதனைத் தொடர்ந்து மழலையர்களின் கலைநிகழ்ச்சியானது நடைபெற்றது. அதில் நடனம் மற்றும் இசைக்கருவிகள் மூலம் பாடல்கள் பாடி வியக்க வைத்தனர். ஆர்வத்தை தூண்டும் வகையில் மாசுபாட்டினைக் குறித்து நாடகம் ஒன்றினை நிகழ்த்தி காட்டினர். மழலையர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு இவ்விழாவினை மேலும் சிறப்பூட்டினர்.