சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்வு

சமூக நல்லிணக்க இத்தார் நோன்பு நிகழ்வில் அரசியல் கட்சி முக்கிய தலைவர்கள் மற்றும் பெரம்பலூர் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்;

Update: 2025-03-22 14:44 GMT
பெரம்பலூர் மாவட்ட SDPI கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் நிஸ்வான் ஹாலில் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் செய்யது அபுதாஹிர் வரவேற்றார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக அஇஅதிமுக மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், அரியலூர் பெரம்பலூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை தலைவர் முஹம்மது முனீர் ஹஜ்ரத், தேமுதிக மாவட்ட செயலாளர் துரை சிவா ஐயப்பன், தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் சிவக்குமார், பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் காமராஜ், SS எலக்ட்ரானிக்ஸ் சுல்தான் இப்ராஹிம், டவுன் பள்ளிவாசல் தலைவர் அல்லாபிச்சை, டாக்டர். ராஜா முஹம்மது, டாக்டர். கருணாகரன், நூர் பள்ளிவாசல் தலைவர் பாட்சா மைதீன், மக்கா பள்ளிவாசல் தலைவர் காதர் ஷரீப், வழக்கறிஞர் முஹம்மத் இலியாஸ், கலிபா பள்ளிவாசல் தலைவர் அஹமது பாதுஷா, இமாம் அபுஹனிபா பள்ளிவாசல் தலைவர் ஷாஜஹான், ஜன்னத்துல் பிர்தௌஸ் தலைவர் சையத் முஹம்மத் பாட்சா, சர்புதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். SDPI கட்சியின் மாவட்ட, நகர தலைவர்கள் முன்னிலை வகித்தனர். இறுதியாக நகர துணைத் தலைவர் சேக் தாவூது நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

Similar News