பொதுமக்களுக்கு நோட்டீஸ்கள் வழங்கிய எம்எல்ஏ..
திருவாரூரில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை மக்களிடம் அம்பலப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கிய திமுகவினர்..;
ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதுடன், இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி என பல்வேறு வகையில் மாநிலங்களை ஒடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருவாரூரில் திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் ஓன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை, அனைத்து பொது மக்களுக்கும் புரியும் வகையில் விரிவாக அச்சடித்து அதனை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.