கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி.
திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.;
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் திருவாரூர் மாவட்ட கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கான்ஸ்ன்டைன் ரவீந்திரன், ஹாஜா கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினர். அப்போது பேசிய திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் மராட்டிய மன்னர் சிவாஜி பிறந்த மாநிலத்தில் தற்போது மராட்டிய மொழி இல்லை. ஹிந்தி தான் இருக்கிறது. இந்தி திணிப்பு தான் இதற்கு காரணம் என்று பேசினார். பின்னர் மாணவர்கள் மத்தியில் பேச தொடங்கிய கான்ஸ்ன்டைன் ரவீந்திரன். தமிழில் பேசவா என்று கேட்க மாணவர்கள் தமிழில் பேசுங்கள் என கை தூக்கினர். தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசவா எனக் கேட்டபோது ஆங்கிலத்தில் பேசுங்கள் என உற்சாகம் முழக்கம் விட்டனர். தொடர்ந்து வேறு மொழியில் பேசவா எனக் கேட்டபோது வேண்டவே வேண்டாம் என மாணவர்கள் மறுத்தனர். இதைத்தான் தமிழக முதல்வரும் செய்து கொண்டிருக்கிறார் தமிழக முதல்வருக்கு உறுதுணையாக திருவாரூர் மாணவர்கள் உள்ளனர் என்பது முதல்வருக்கு பெரு மகிழ்ச்சியை கொடுக்கும் என்றார்.