ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தங்கச்சி மடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தங்கச்சிமடத்தில் நாம் தமிழர் மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள், பாதிக்கப்பட்ட மீனவர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அரசையும், மத்திய மாநில அரசுக்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் மீனவர்கள் கைது செய்யப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மீனவர்கள் பிரச்சனைக்காக கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சி குரல் கொடுத்து வருகிறது. ஜெகதாபட்டினம் மீனவர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்திய போது தமிழக மீனவரை அடித்தால் இலங்கை மாணவனை அடிப்பேன் என பேசியதற்கு 6 மாதம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டேன் ஆனாலும் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து மீனவ மக்களுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. மீனவர்களின் பிரச்சனை தொடர்கதையாகி கொண்டே போகிறது, மீனவர்களை ஓட்டுக்காக மட்டுமே இரு அரசுகளும் பயன்படுத்தி வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவருக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்கிய அரசு மீனவர் கடலில் இறந்தால், படகை இழந்தால் என்ன இழப்பீடு கொடுக்கிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், மீனவர் பிரச்சனை என்பது நம் நாட்டிற்கு அவமானமான ஒன்று. எந்த நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக இந்திய கடற்படை கடலில் நிறுத்தப்பட்டுள்ளது என தெரியவில்லை. மீனவர்கள் தாக்கப்படும் போதும் இந்திய கடற்படை வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. தொகுதி மறு சீரமைப்புக்காக அனைத்து மாநில முதல்வர்களை அழைத்து பேசும் தமிழகம் முதல்வர் ஏன் கச்சத்தீவை மீட்கவும் மீனவர்கள் வாழ்வுரிமையை மீட்கவும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என சீமான் கேள்வி எழுப்பினார். 2024 ஆம் ஆண்டு தேர்தலின் காலங்களில் ஒரு மாதம் மட்டும் கச்சத்தீவை மீட்க வேண்டும் என பேசிய நரேந்திர மோடி அதன் பிறகு கச்சத்தீவை மீட்பதற்கு எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. கேரளா, ஆந்திரா போன்ற மற்ற மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி அடுத்த நாட்டுக்குள் சென்று மீன் பிடித்தால் கைது செய்யப்படுவதோ, தாக்கப்படுவதோ இல்லை ஏனெனில் மீனவர்களுக்கு அந்த மாநில அரசு பாதுகாப்பு கொடுப்பதால் அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் ஆனால் தமிழகத்தில் மட்டும் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் சுடப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. எல்லை தாண்டி செல்வது தமிழர் என்பதால் மட்டுமே மீனவர்கள் சுடப்படுகிறார்கள் மீனவர்கள் பிரச்சனைக்கு இருநாட்டு தலைவர்கள் அமர்ந்து பேசி முடிவு எடுக்க வேண்டும் இல்லையெனில் ஐந்து ஆண்டுகள் நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கை வைக்க அஞ்சும் என்றார். டாஸ்மார்க் ஊழலுக்கு எதிராக பாஜக யாரை எதிர்த்து போராடியது எதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்பது தெரியவில்லை எனவே பாஜக திமுக நல்ல உறவில் இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது. நாடக ஆசிரியரின் மகன் முதல்வராக இருந்தால் அனைத்து நாடகங்களும் அரங்கேறிக் கொண்டே இருக்கும். தமிழகத்தில் கடந்த ஆட்சியைக் காட்டிலும் இந்த ஆட்சியில் கொலை கொள்ளை அதிகரித்துள்ளது. மீனவர்கள் எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள் என்பதால் ஸ்டெர்லைட் போன்ற நச்சு ஆலைகள் கடலுக்கு அடியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் உள்ளிட்டவைகள் மீனவர்களை குறி மீனவர்கள் வாழும் பகுதியில் தேர்வு செய்யப்படுவதாக சீமான் தெரிவித்தார்.