தக்கோலத்தில் பாஜக தலைவர் கைதை கண்டித்து சாலை மறியல்
பாஜக தலைவர் கைதை கண்டித்து சாலை மறியல்;

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பேரூர் பாஜக தலைவர் பிரகாஷ். இவர் தக்கோலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் சுரேஷ் என்பவரிடம் இறந்த ஆசிரியர் ஒருவரின் பண பலன் பெறுவதற்கு தடையாக இருக்கிறாய் என்று சொல்லி தாக்கியுள்ளார். தக்கோலம் போலீசில் சுரேஷ் புகார் கொடுத்தார்.பாஜக தலைவரை இன்று கைது செய்தனர். அதை கண்டித்தும் இளநிலை உதவியாளர் சுரேஷை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.