அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்
மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்;
சேலம் மாவட்டம் ஓமலூர் பைபாஸ் ரோட்டில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மகுடஞ்சாவடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் என்கிற மணிகண்டன் ஏற்பாட்டில் மாற்றுக்கட்சியினர் 400-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். புதிதாக அ.தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கட்சி துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது, சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், ஓமலூர் எம்.எல்.ஏ.மணி, மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய செயலாளர் சவுந்தர்ராஜன், மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் கோவிந்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.