ராமநாதபுரம் அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்து ராமநாதபுரத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது;

Update: 2025-03-24 03:47 GMT
ராமநாதபுரம் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்து ராமநாதபுரத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர் தேர்தல் நேரத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் அரசு ஊழியர் ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவோம் என்று கூறி அவருடைய வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த திமுக வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் தங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததாக கூறி திமுக அரசை கண்டித்தும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர் உண்ணாவிரத போராட்டத்தின் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்த திமுக மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினர் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் தேர்தலின் போது அளித்த வாக்குறுதி படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் கால வரையறை இன்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசையும் முதலமைச்சர் ஸ்டாலினையும் கண்டித்து இந்த உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Similar News