ராமநாதபுரம் மீனவ குடும்ப மாவட்ட ஆட்சி இடம் மனு
சவுதி அரேபியாவில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தாயகம் கொண்டுவர மனைவி மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.;
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா அக்கிரமேசி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் கோவிந்தசாமி (38). இவருக்கு தேசிய ராணி என்பருடனும் திருமணம் ஆகி 5 குழந்தைகள் உள்ளன. குடும்ப சூழ்நிலை காரணமாக சவுதி அரேபியாவில் கனரக வாகன ஓட்டுனராக கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். நேற்று திடீரென வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் அதில் உயிரிழந்ததாக தொலைபேசியில் அவரது மனைவிக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து உறவினர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது சவுதி அரேபியா நிறுவனத்தில் இருந்தும் அவர் உயிரிழந்து விட்டதாக நம்பாதன்மையான செய்தி வந்துள்ளது. மேலும் அவரது உடலை தாயகம் கொண்டு வருவதற்கு 15 நாட்களுக்கு மேல் ஆகும் என தெரிவித்துள்ளனர்.. மேலும் அவருக்கு கொடுக்க வேண்டிய பண பலன்கள் எதையும் தருவதாகவும் அவர்கள் தெரிவிக்கவில்லை எனவும் அவரது உறவினர்கள் கூறினர். இதுகுறித்து அந்நிறுவனத்தில் கேட்டபோது மிரட்டும் தோனியில் பேசியதாகும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.. எனவே தனது கணவரின் உடலை தாயகத்திற்கு கொண்டு வர வேண்டும் எனவும் அவருக்கு கிடைக்க வேண்டிய பண பலன்களை பெற்றுத் தர வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அவர்களிடம் மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து கணவனை இழந்து 5 குழந்தைகளுடன் இனி எப்படி வாழ போகிறேன் என்று தெரியவில்லை எனவே தமிழக அரசு தயவு கூர்ந்து அரசு பணி குடும்பத்திற்கு வழங்கினால் நன்றாக இருக்கும் என உறவினர்கள் கேட்டுக்கொண்டனர்...