தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளைக் கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
*தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்திட கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 500க்கும் மேற்பட்டோர் நேரில் புகார் மனு*;
. கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி சென்னையில் மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்த அல்பாசித் என்பவர் தடை செய்யப்பட்ட ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அல்பாசித்தோடு வாட்ஸ் அப் குழுவில் தொடர்பில் இருந்த திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த 15 நபர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை நடத்திய குடும்பத்தினர் உள்ளிட்ட 27 நபர்களுக்கு சம்மன் அனுப்பி கடந்த 15 16 17 ஆகிய மூன்று தேதிகளில் சீர்காழி காவல் நிலையத்தில் விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையில் கலந்து கொண்டவர்களை மிரட்டி பொய் சாட்சி சொல்ல வற்புறுத்துவதாகவும் பார்க்காததை பார்த்ததாக கூற சொல்வதாகவும் மிரட்டுவதாக குற்றம் சாட்டி இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 500க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் ஹெச். எஸ் ஸ்ரீகாந்திடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.