மயிலாடுதுறை புதிய நகராட்சி ஆணையராக வீர முத்துக்குமார் பொறுப்பு ஏற்பு
மயிலாடுதுறை நகராட்சி புதிய ஆணையர் வீர முத்துக்குமார். அவரை சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் சந்தித்து வாழ்த்து தெரிவித்துகோரிக்கையும் வைத்தார்;
மயிலாடுதுறை நகராட்சி புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ளவர் வீரமுத்துக்குமார். அவரை சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து நகரத்தின் வளர்ச்சி மற்றும் வரலாறு குறித்த பல்வேறு விஷயங்களை எடுத்துக் கூறியதுடன், புனிதமான துலா கட்ட காவிரியை நகராட்சியின் சார்பில் ஆண்டு முழுவதும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பாதுகாக்கவும், தினமும் அப்பகுதிக்கு வருகை தரும் உள்ளூர் வெளியூர் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும், இரவு நேரத்தில் மின் விளக்குகள் இல்லாததால் அப்பகுதியை குடிகாரர்கள் தங்களுக்கான இடமாக மாற்றிக் கொண்டுள்ளதால் குடிகாரர்களிடமிருந்து அவ்விடத்தைக் காப்பாற்றிட ஹை மாஸ் மின் விளக்குகள் அமைத்து தரவும், நகராட்சி சாலைகளின் குறுக்கே ஆங்காங்கே உள்ள பள்ளங்களை மூடவும் அரசு மருத்துவமனை சாலை ஸ்பீட் பிரேக் போன்றவற்றை சீரமைக்கவும் கோரிக்கை விடுத்தார். கோரிக்கைகளை ஆவண செய்வதாக ஆணையர், சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரத்திடம் உறுதியளித்தார்.