விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் நடைபெற்ற விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.;

Update: 2025-03-24 18:22 GMT
விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
  • whatsapp icon
தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துகின்ற வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் விவசாய மக்கள் பயன்பெறுகின்ற வகையிலும், அவர்களுக்கு நன்மையளிக்கின்ற வகையிலும், விவசாய குடும்பத்தினை முன்னேற்றும் வகையிலும் பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் உள்ளது. விவசாய பெருமக்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். வேளாண்மைத்துறையின் கீழ் குறிப்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2024-25-ன் கீழ் திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.57,78,000/ மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு, 89 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் வரப்புப் பயிராக உளுந்து சாகுபடியை ஊக்குவித்திட 50 சதவீத மானியத்தில் உளுந்து விதை விநியோகம், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையினை பிரபலப்படுத்திட உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரம், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் அடங்கிய தொகுப்பு 50 சதவீத மானியத்திலும், விசைத் தெளிப்பான் 50 சதவீத மானியத்தில் விநியோகம் முதலான விவசாயிகளுக்கு பயன்பெறும் திட்டக்கூறுகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

Similar News