அரசு பேருந்தில் மோதிய லாரியால் பரபரப்பு
அதிக தடிமனான இரும்புகளை ஏற்றி வந்த லாரி. அரசு பேருந்தின் பக்கவாட்டில் ஜன்னலுக்குள் அதன் கம்பிகள் நுழைந்ததால் விபத்து பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்த இருவர் சிறு காயங்களோடு உயிர்த்தப்பினர் இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல்;
அதிக தடிமனான இரும்புகளை ஏற்றி வந்த லாரி. அரசு பேருந்தின் பக்கவாட்டில் ஜன்னலுக்குள் அதன் கம்பிகள் நுழைந்ததால் விபத்து பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்த இருவர் சிறு காயங்களோடு உயிர்த்தப்பினர் இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிகொண்டு செங்கல்பட்டு செல்லும் வழித்தடம் 82 c பேருந்து , வட்டாட்சியர் அலுவலகம் எதிரே வந்து கொண்டிருந்த போது, , அதே மார்க்கத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து அதிக தடிமனான இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி அரசுப் பேருந்தில் பக்கவாட்டில் மோதியதில், இதில் அரசு பேருந்தில் நான்கு இருக்கைகள் லாரியின் கொக்கியில் மாட்டி விபத்தில் சிக்கியது,, இதனிடையே பேருந்தின் பக்கவாட்டில் அமர்ந்திருந்த இருவர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர், இதனால் திருப்பதியில் இருந்து சென்னை செல்லும் மார்க்கத்தில் வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டு, ஆம்புலன்ஸும் நெரிசலில் சிக்கிக்கொண்டது , இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் காவல் துறையினர் பேருந்து மற்றும் லாரியை சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர், குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு திருத்தணியில் விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்த விவகாரம் பேசு பொருளாக ஆன நிலையில் மீண்டும் அரசு பேருந்து ஒன்று விபத்து சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது, அப்பகுதிவாசியில் லாரி ஓட்டுனரை கீழே இறங்க சொல்லி வற்புறுத்தியதால் பயந்து போன லாரி ஓட்டுனர் லாரி விட்டு இறங்காமல் லாரியிலேயே அமர்ந்திருந்தார், இதனால் திருவள்ளூரில் இருந்து சென்னை செல்லும் மார்க்கமான சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கியது குறிப்பிடத்தக்கது,.,..