அரிசி ஆலையில் உம்மியில் சிக்கி வடமாநில இளைஞர் பலி
அரிசி ஆலையில் லாரியில் உம்மி ஏற்றும்போது உம்மிக்குள் 2 தொழிலாளர்கள் சிக்கியதில் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் பீகாரை சேர்ந்த ஜோகான் 25 என்பவர் உயிரிழப்பு. செங்குன்றம் போலீஸ் விசாரணை;
செங்குன்றம் அருகே தீர்த்தங்கரையம்பட்டு பகுதியில் தனியார் அரிசி ஆலையில் லாரியில் உம்மி ஏற்றும்போது உம்மிக்குள் 2 தொழிலாளர்கள் சிக்கியதில் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் பீகாரை சேர்ந்த ஜோகான் 25 என்பவர் உயிரிழப்பு. செங்குன்றம் போலீஸ் விசாரணை திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த தீர்த்தகிரியம்பட்டு பாலவாயில் பகுதியில் பரமேஸ்வரி அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது இந்நிலையில் அரிசி ஆலைக்குள் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் உமியை அள்ளுவதற்கு லாரி வந்து நெல் உமியை அள்ளிக் கொண்டு இருக்கும் பொழுது உமி மற்றும் தகர சீட்டுகள் மேலிருந்து சரிந்து விழுந்து இரண்டு நபர்களை மூடிக்கொண்டது இந்நிலையில் சத்தம் கேட்டு உடன் பணிபுரிந்தவர்கள் ஓடி வந்து உம்மியை அகற்றி. ஒருவரை உயிருடன் காப்பாற்றினர் இந்நிலையில் உம்மிக்குள் விழுந்த வட மாநில தொழிலாளியை செங்குன்றம் தீயணைப்பு துறையினர் மீட்க போராடிய நிலையில் வடமாநில தொழிலாளி சம்பவ இடத்திலேயே மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது தெரிய வந்தது பின்னர் இச்சம்பவம் குறித்து செங்குன்றம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்த நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் இறந்தவரின் பெயர் ஜித்தாந்தர் ஜோகான்,/25 என்பது இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது மேலும் போலீசாரின் விசாரணையில் ஒப்பந்த முறையில் பணி செய்ய அமர்த்தபட்டவர் எனவும் விசாரணையில் தெரிய வந்தது இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வடமாநில தொழிலாளி உம்மிக்குள் விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது