வடசென்னை அனல் மின் நிலைய நுழைவாயிலில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
வடசென்னை அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பாக பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள்;
தமிழகம் முழுவதும் 10ஆயிரம் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு மின்வாரியம் நடவடிக்கை எடுக்க தவறினால் கோட்டை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக தமிழ்நாடு மின்வாரிய மத்திய அமைப்பு அறிவிப்பு வடசென்னை அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பாக பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலை ஒன்று மற்றும் இரண்டில் பணிபுரியும் 2000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனல் மின் நிலைய வாயல் முன்பாக ஒப்பந்த ஊழியர்கள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் மின்வாரியத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் முழுவதும் பணிபுரியும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி படி தங்களது கோரிக்கைகளை தமிழக அரசும் மின்வாரியம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் தமிழ்நாடு மின்ஊழியர் மத்தியஅமைப்பு சார்பில் கோட்டையை நோக்கி பேரணி செல்ல உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்