டாஸ்மாக் கடையில் முதல்வர் படம் ஒட்ட முயற்சி

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு தமிழக முதல்வர் படத்தை ஒட்டமுயன்ற பாஜக மாவட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர் உட்பட நான்கு பேர் கைது;

Update: 2025-03-25 14:14 GMT
  • whatsapp icon
மயிலாடுதுறையில்டாஸ்மாக் மதுபான கடையில் ஸ்டிக்கர் ஒட்ட முயன்ற பாஜகவினர்; போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம். தள்ளுமுள்ளு.  மயிலாடுதுறை பழைய ஸ்டேட் பேங்க் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில், முதல்வரின் உருவப்படம் பதிக்கப்பட்ட அப்பா ஸ்டிக்கரை ஒட்ட முயன்ற பாஜகவினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாக இருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத தொடர்ந்து டிஎஸ்பி பாலாஜி காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான போலீசார் பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு, மாவட்ட துணை தலைவர் மோடி கண்ணன் மற்றும் இரண்டு பெண் நிர்வாகிகள் ஆகிய நான்கு பேரை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி கொண்டு சென்றனர்.  அப்போது போலீஸை  கண்டித்து பாஜகவினர்  முழக்கங்களை எழுப்பினர்.   கைது செய்யப்பட்ட 4 பாஜகவினரை தனியார் திருமண கூடத்துக்கு போலீசார் அழைத்து சென்று அவர்கள்மீது வழக்கு பதிவு செய்தனர்.

Similar News