தமிழக கோ-கோ அணிக்கு மயிலாடுதுறையில் பயிற்சி

ஒடிசா மாநிலம் பூரியில் நடைபெறவுள்ள தேசிய கோ-கோ போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழக அணி வீரர்களுக்கு மயிலாடுதுறையில் 6 நாட்கள் பயிற்சி முகாம்:-  சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 15 வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்:-;

Update: 2025-03-25 14:18 GMT
  • whatsapp icon
57-வது தேசிய ஆண்கள் கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் பூரியில் மார்ச் 31-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு கோ-கோ அசோசியேஷன் இந்த போட்டிக்கான பொறுப்பை மயிலாடுதுறை மாவட்ட கோ-கோ அசோசியேஷனிடம் ஒப்படைத்துள்ளது. இதன் காரணமாக, இப்போட்டியில்  பங்கேற்கவுள்ள வீரர்கள் சென்னை, கோயமுத்தூர், தஞ்சாவூர், சிவகங்கை, ஈரோடு, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 15 வீரர்கள், 6 நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். பல்வேறு சர்வதேச போட்டிகள், ஆசிய போட்டிகள், தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள வீரர்கள் பலர் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், போட்டியில் கோப்பை வெல்லும் உறுதியுடன் கோ-கோ வீரர்கள் காலை, மாலை இருவேளையும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீரர்களுக்கான அடிப்படை வசதிகள் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மற்றும் ஆர்எச்வி ஸ்போர்ட்ஸ் பவுன்டேஷன் சார்பில் செய்து தரப்பட்டுள்ளது.

Similar News