பாஜக மாவட்ட பொறுப்பாளர்களுக்கு சிறை
டாஸ்மாக் கடையில் தமிழக முதல்வர் படத்தை ஒட்ட முயன்ற பாஜக நிர்வாகிகள் 2 பேருக்கு சிறை பாஜகவினர் காவல்நிலையம் முன் திரண்டதால் திமுகவினர் எதிர் போராட்டம்;
மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடையில் தமிழக முதல்வரின் உருவப்படம் பதித்த ஸ்டிக்கர் ஒட்ட முயன்ற பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு, மாவட்ட துணை தலைவர் மோடி கண்ணன் ஆகியோர் இன்று காலை கைது செய்யப்பட்டனர், அவர்களது கைதைக் கண்டித்து பாஜகவினர் மயிலாடுதுறை காவல்நிலையம் முன்பு குவிந்து வந்தனர், இதனைக் கேள்விப்பட்ட திமுகவினர் இந்த செயலைக் கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முனபு ஒன்றுதிரண்டனர், போலீசார் திமுகவினரை அமைதிப்படுத்தி திருப்பி அனுப்பினர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்டிருந்த பாஜக வின் 2 நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர்மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.