தமிழ்நாடு அரசின் தூய தமிழ்ப்பற்றாளர் விருது வழங்கப்பட்டது.
தமிழ் வளர்ச்சித் துனற அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பொன்னாடை அணிவித்து விருது வழங்கி சிறப்பித்தார். 38 மாவட்டங்களிலிருந்தும் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.;

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழ் அரகராதியியல் நாள் விழாவில், பெரம்பலூர் மாவட்டம் இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் மாயக்கிருட்டிணன் தமிழ்நாடு அரசின் தூய தமிழ்ப்பற்றாளர் விருது வழங்கப்பட்டது. மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துனற அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பொன்னாடை அணிவித்து விருது வழங்கி சிறப்பித்தார். 38 மாவட்டங்களிலிருந்தும் ஒருவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. விருதுடன் ரூபாய் 20000 காசோலை வழங்கப்பட்டது. இதுவரை இவர் 355 விருதுகளைப் பெற்றுள்ளார். இவ்விருது 356 ஆகும். 3856வது சான்றிதழ் என்பது குறிப்பிடத்தக்கது.