ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியிடம் மனு
நியோ மேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய பணத்தை மீட்டுத் தர வலியுறுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.;
ராமநாதபுரம் நியோ மேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து புகார் அளித்து வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குறைதீர்ப்பு நாள் கூட்டத்திற்கு வந்த 50-க்கும் மேற்பட்டோர் நிறுவனத்தால் கோடிக்கணக்கில் பணத்தை இழந்து இருப்பதாகவும் வாழ்வாதாரத்தை இழந்து தவிர்க்கக்கூடிய தங்களுக்கு தங்களுடைய பணத்தை மீட்டு தர புனிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் கோரிக்கை மனு அளித்தனர். கடன் வாங்கி முதலீடு செய்ததால் தங்களை கடன் கொடுத்தவர்கள் சொல்லண்ணா துயரத்திற்கு ஆளாக்கி வருவதாகவும் எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.