ராமநாதபுரம் தடை செய்யப்பட்ட கடல் அட்டையுடன் இருவர் கைது

மண்டபத்தில் 25 கிலோ கடல் அட்டையுடன் இருசக்கர வாகனம் மற்றும் ஒருவர் கைது வனக்காவல் நிலையம் நடவடிக்கை;

Update: 2025-03-26 05:27 GMT
  • whatsapp icon
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த மண்டபத்தில் காலை ராமநாதபுரம் வனக் காவல் நிலைய அலுவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மண்டபம் கடற்கரை ஓரத்தில் ரோந்து சென்ற போது இரு சக்கர வாகனத்தில் வந்த மண்டபத்தை சேர்ந்த செய்யது அடிமை என்பவரின் மகன் தாரிக் (30) தனது இருசக்கர வாகனத்தில் 25 கிலோ எடை கொண்ட கடல் அட்டை இறந்த நிலையில் வாழியில் வைத்து இருந்ததை கண்ட வனக்காவல் நிலைய அலுவலர்கள் அவரை பிடித்து விசாரணை செய்து இருசக்கர வாகனம் மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள கடல் அட்டையை பறிமுதல் செய்து ,மண்டபம் வனச்சரக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News