தொப்பூர் கணவாய் அருகே கனரக வாகனம் விபத்து
நல்லம்பள்ளி அருகே தொப்பூர் கணவாய் அருகே கனரக வாகனம் விபத்து,தொப்பூர் காவலர்கள் விசாரணை;
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தொப்பூர் கணவாய் அடுத்த பாரத் பெட்ரோல் பங்க் அருகில், இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஆயில் ஏற்றிக் கொண்டு சென்ற கனரக வாகனம், ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையில் தறிக்கட்டு இங்கும் அங்கும் சென்ற வாகனம் முன்னே சென்ற வாகனம் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் சாலையில் ஆயில் பெருக்கெடுத்து ஓடியது. இந்த விபத்தில் ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இதனால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தொப்பூர் காவலர்கள் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் போக்குவரத்தை சீர் செய்தனர் மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.