ராமநாதபுரம் மழலையர் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது
முதுகுளத்தூரில் தனியார் மழலையர் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது;

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளியின் 25ஆம் ஆண்டு ஆண்டு விழா நடைபெற்றது.இதில், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் மாணவ மாணவிகள் கரகாட்டம், ஒயிலாட்டம், மயில் ஆட்டம், மற்றும் யோகா தனித் திறன் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு,கலை நிகழ்ச்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. நிகழ்ச்சியை காண பெற்றோர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேடையில் ஆடிக் கொண்டிருந்த போது, ஆட்டத்தை மறந்து விட்ட குழந்தைகளுக்கு நடனத்தை நினைவூட்டும் வகையில் மேடையின் அருகாமையில் நின்று கொண்டிருந்த அவர்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியர்கள், சைகை மூலம் ஆடி காண்பித்ததை பார்த்த குழந்தைகள் அதே போன்று மேடையில் ஆடி ஆசிரியர்களை மட்டுமின்றி பெற்றோர்களையும் பார்வையாளர்களையும் மகிழ்ச்சி படுத்தினர். இவ்விழாவில், பெற்றோர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.