ராமநாதபுரம் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் கலை சங்கமம் கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் கலை சங்கமம் கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது;
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் கலை சங்கமம் கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,அவர்கள் பங்கேற்று கிராமிய கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டதுடன் கலைச் சங்கமம் கலைக்குழுவில் உள்ள கிராமிய கலைஞர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார். அதனைத்தொடர்ந்து கிராமிய கலை நிகழ்ச்சியான கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கு கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் இராஜமனோகரன் அவர்கள், கலைச்சங்கம கிராமிய கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் திரு.மருங்கன் அவர்கள், முருகன் அவர்கள் மற்றும் நாட்டுப்புற கிராமிய கலை சங்கமத்தின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.