தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் 

கேப் கல்லூரியில்;

Update: 2025-03-26 14:39 GMT
கன்னியாகுமரி அருகே  லெவிஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் மற்றும் சிவில் இன்ஜினியரிங் துறைகள் இணைந்து "கம்போசிட் பொருட்களில் ஆராய்ச்சி சிக்கல்கள்" குறித்து ஒருநாள் தேசிய அளவிலான கருத்தரங்கம் கல்லூரி தலைவர் கிருஷ்ணபிள்ளை மற்றும் இணை தலைவர் அய்யப்ப கார்த்திக், தலைமை நிர்வாக அதிகாரி ரெனின் மற்றும் கல்லூரி முதல்வர்  தேவ் ஆர். நியூலின் ஆகியோர் வழிகாட்டுதல்படி நடத்தினர் .      இந்த நிகழ்வில் கம்போசிட் பொருட்கள், பயோ-கம்போசிட்கள், 3டி பிரிண்டிங், ஏரோஸ்பேஸ் உலோகு லேமினேட்டுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைப்புகளில் விவாதிக்கப்பட்டன. வினோலின் ஜப்பேஸ் மற்றும் ஆதம் கான் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்று, மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் உரையாற்றினர். மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், மற்றும் பேராசிரியர்கள் இதில்  கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Similar News