திடீர் போராட்டம் நடத்திய மார்க்.கம்யூ.கட்சியினர்மீது வழக்கு
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக மார்க்.கம்யூ. கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், கடலூரில் நில மீட்பு உரிமைக்கான போராட்டத்தில் கட்சியின் செயலாளர் சண்முகம் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து மறியல் போராட்டம்நடத்தியவர்கள்மீது வழக்கு;
கடலூர் மாவட்டத்தில் நில மீட்பு உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் மற்றும் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன்(67), மேகநாதன்(47) வெங்கடேஷ்குமார்(38) ரவிச்சந்திரன்(47) கண்ணன்(62) ஸ்டாலின், ஜெகதீஸ்வரன், துரைராஜ், விஜய் ஆகியோர் மீது இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது