ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு திருவிழா

பெரம்பலூர் நகர்மன்ற உறுப்பினர் சித்ரா சிவகுமார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மாலினி முத்துக்குமார், பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் தலைமை ஆசிரியர் திருமலைச்செல்வி ஆண்டறிக்கையை வாசித்தார்.;

Update: 2025-03-26 17:13 GMT
பெரம்பலூர் மாவட்ட தொடக்கக் கல்வித் துறையின் சார்பாக பெரம்பலூர் வட்டம் பெரம்பலூர் (கிழக்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு திருவிழா இன்று பெரம்பலூர் சங்குபேட்டை சமுதாய கூடத்தில் நடைப்பெற்றது. விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அய்யாசாமி தலைமை வகித்தார். பெரம்பலூர் நகர்மன்ற உறுப்பினர் சித்ரா சிவகுமார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மாலினி முத்துக்குமார், பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் தலைமை ஆசிரியர் திருமலைச்செல்வி ஆண்டறிக்கையை வாசித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ஜோதிலெட்சுமி, அருண்குமார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி, முதன்மைக் கல்வி அலுவலக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன் , வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஜனனி மா.ரமேஷ் ம.ரமேஷ் குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளையின் தலைவர் ஜெயராமன், உதிரம் நாகராஜ், செங்குணம் குமார் அய்யாவு உட்பட இ.ஐ.சி சிறப்பு ஆசிரியர்கள், பள்ளி ஆயத்த மைய சிறப்பு ஆசிரியர்கள் பள்ளி உதவி ஆசிரியர்கள் , மாணவர்களின் பெற்றோர்கள் , பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இல்லம் தேடி தன்னார்வலர்கள், காலை மற்றும் மதிய உணவு திட்ட பணியாளர்கள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News