ஆண்டிமடம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதலில் ஒருவர் பலி இருவர் படுகாயம்
ஆண்டிமடம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதலில் ஒருவர் பலி இருவர் படுகாயம்;
அரியலூர் மார்ச்.26- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அனந்த பத்மநாபன் மளிகை கடை நடத்தி வருகிறார், இவரது மகன் வினோத்குமார் (31) இன்ஜினியரிங் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை வேலை பார்த்து வந்தவர். தற்பொழுது பத்மநாபன் நடத்தி வரும் மளிகை கடையில் தந்தைக்குத் துணையாக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலையின் காரணமாக ஸ்ரீமுஷ்ணம் சென்று விட்டு மீண்டும் கவரப்பாளையம் வருவதற்காக தஞ்சாவூரான் சாவடி கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வக்கிரமாரி கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் (25), நாராயணன் ஆகியோர் ஆண்டிமடம் வந்துவிட்டு திரும்ப ஊருக்கு செல்வதற்காக தஞ்சாவூராஞ்சாவடி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது வினோத் குமார் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளும் மாதேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் வினோத்குமார், மாதேஷ், நாராயணன் மூவரும் தூக்கி வீசப்பட்டு கிடந்தனர் .அவ்வழியே சென்றவர்கள் இதைக் கண்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கும் ஆண்டிமடம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ பணியாளர்கள் வினோத் குமார் தலையில் பலத்த அடிபட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இறந்து விட்டதாக கூறினர். மாதேஷ், நாராயணன் ரத்த வெள்ளத்தில் தலையில் பலத்த அடிபட்ட நிலையில் இருந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் கட்ட சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக நாராயணன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாதேஷ் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் போலீசார் வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.