குமரி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமான மார்த்தாண்டத்தில் எப்போதும் மக்கள் நடமாட்டம், போக்குவரத்து நெருக்கடி அதிகமாக காணப்படுகிறது. இங்கு நாகர்கோவில் - திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் மேம்பாலம் வழியாக இயங்கி வருகின்றன. ஆனால் நகர பஸ்களும், இதர பஸ்களும் மார்த்தாண்ட பஸ் நிலையத்திலிருந்து மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக சென்று வருகின்றன. மார்த்தாண்ட பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் பஸ்களில் மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் இருந்துதான் ஏராளமான மக்கள் ஏறுகிறார்கள். இதற்காக மார்த்தாண்டம் சந்திப்பில் காந்தி மைதானத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த மைதானத்தில் பசுக்காக காத்திருக்கும் பயணிகள் மழைக்காலத்திலும் வெயிலிலும் ஒதுங்கி நிற்பதற்கு வசதியாக பயணிகள் நிழற்குடை எதுவும் இல்லை. இதனால் பயணிகள் மழையின் போது பக்கத்தில் உள்ள கடைகளில் ஒதுங்கும் நிலை உள்ளது. மேலும் கோடைகாரங்களில் வெயிலின் தாக்கத்தில் அவதிப் படுகிறார்கள். எனவே மழை வெயில் காலங்களில் ஒதுங்க நிழற்குடை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களில் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.