நகராட்சியில் எந்த திட்டங்கள் வந்தாலும் நகர மன்ற உறுப்பினர்கள் முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்

நகராட்சியில் எந்த திட்டங்கள் வந்தாலும் நகர மன்ற உறுப்பினர்கள் முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்;

Update: 2025-03-27 14:13 GMT
  • whatsapp icon
திருச்செங்கோட்டில் நகரமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் திருச்செங்கோடு சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நகர் மன்றம் தொடங்கிய முதல் கடும் வாக்குவாதங்களுடன் சென்று கொண்டிருந்த நிலையில் நாலாவது வார்டு உறுப்பினர் ரமேஷ் நீண்ட நேரம் பேசியதால் மற்ற வார்டு உறுப்பினர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை என கூச்சல்கள் எழுப்பப்பட்டு வந்தது கூட்டப்பள்ளி பகுதியில் நகராட்சியில் சுத்திகரிப்பு நிலைய திட்டம் அமைய மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக அதிமுக நகரச் செயலாளர் 22 வது வார்டு கவுன்சிலருமான அங்கமுத்து தனது கருத்தை முன்வைத்தபோது 21 வது வார்டு கவுன்சிலர் சண்முகவடிவு அதிமுக கட்சிக்காரர்களும் பாஜகவினரும் சேர்ந்தே சுத்திகரிப்பு நிலைய திட்டம் கூட்டப்பள்ளி பகுதியில் அமைக்க மக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள் எனவும் மக்கள் திட்டத்தை செயல்படுத்துவதில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை இவர்கள் தூண்டுதலின் பெயரால் திட்டம் செயல்படுவதில் சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்தார் அப்போது குறுக்கிட்டு பேசிய 20 ஆவது வார்டு அதிமுக கவுன்சிலர் மல்லிகா அதிமுகவினர் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு முன் திமுகவினர் தான் சுத்திகரிப்பு நிலைய திட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்வதற்காக மக்கள் அனைவரையும் அழைத்துச் சென்றனர் என தெரிவித்தார் அதற்கு பதில் அளித்த நகர்மன்ற தலைவர் திருச்செங்கோடு நகராட்சி தற்போது சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட போதிலும் எதிர்காலத்தை மனதில் கொண்டு ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட புறநகர் பேருந்து நிலைய திட்டம் செயல்படுத்த எதிர்ப்புகள் கிளம்பியது போலவே தற்போது நகராட்சிக்கான சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தவும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன எந்த ஒரு திட்டத்தை செயல்படுத்துவதிலும் எதிர்ப்பை கேங் கேங் ஆக சேர்ந்து கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள் என கூறிய நகர்மன்ற தலைவர் மக்கள் நலனை கருத்தில் கொண்டு மக்கள் பிரதிநிதிகள் செயல்பட வேண்டும் எனவும் எதிர்கால சந்ததிகளின் நலனை கருதி மக்கள் பிரதிநிதிகள் நல்ல திட்டங்களை அந்தத் திட்டத்திற்கான காரணங்களை புரிந்து கொண்டு அதன் நலன்களை அறிந்து ஆரம்பத்திலேயே திட்டம் குறித்து எதிர்ப்பு தெரிவிக்காமல் அதனை நன்கு அறிந்து மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் தெரிவித்தார்

Similar News