ஜெயங்கொண்டம் அருகே அரசு பஸ் மோதி கூலி தொழிலாளி படுகாயம்.
ஜெயங்கொண்டம் அருகே அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.போலீசார் அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்;
அரியலூர்,மார்ச்.27- கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள முருகன்குடி கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (43) இவர் தனது மோட்டார் சைக்கிளில் நண்பர் ஒருவரை பார்க்க சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக மீண்டும் திரும்பி உடையார்பாளையம் டு ஜெயங்கொண்டம் ரோட்டில் ஜெயங்கொண்டம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது தனியார் கல்லூரி அருகே வந்தபோது எதிரே வந்த காட்டுமன்னார்குடி -திருச்சி செல்லும் அரசு பஸ் மோதியதில் பலத்த காயமடைந்த ராமகிருஷ்ணன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மேட்டு 108 மூலம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மனைவி சுந்தரி (32) ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அரசு பஸ்சை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய அரியலூர் மாவட்டம் நரசிங்கபாளையம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் புகழேந்தி (50) என்பவர் மீது வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.