ஆதி திராவிட நல ஆணைய தலைவர் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் மனு

மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாநில ஆணையத் தலைவர் ஆய்வுக்கூட்டம்:-  பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர்கள் பரபரப்பு புகார் மனு;

Update: 2025-03-27 17:53 GMT
. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தமிழ்நாடு  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாநில ஆணையத் தலைவர் முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆணைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.   இக்கூட்டத்தில், முட்டம் கிராமத்தில் சாராய விற்பனையை தட்டிக்கேட்டது தொடர்பான முன்விரோதத்தில் ஹரீஸ், ஹரிசக்தி ஆகிய 2 இளைஞர்கள் சாராய வியாபாரிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இதுவரை இழப்பீடு பெற்றுதர நடவடிக்கை எடுக்கவில்லை என ஹரி சக்தியின் தாயார் கௌரி புகார் அளித்தார்.  இதேபோல், மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம், பாலியல் குற்றங்கள், மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  தொடர்ந்து புகார்மனு அளித்துவரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த  தன்மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், தனிப்பிரிவு ஆய்வாளர் பாலச்சந்தர் ஆகிய இருவரும் பொய்வழக்குகளை பதிவு செய்துள்ளதாக மாவட்ட எஸ்.பி அருகில் இருக்கும்போதே வழக்கறிஞர் சங்கமித்திரன் என்பவர் ஆணைய தலைவரிடம் புகார் மனு அளித்து குற்றம்சாட்டி பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். பல்வேறு அமைப்பினர் புகார் மனுக்களை ஆணைய தலைவரிடம் அளித்தனர்.

Similar News