மாற்று சமூகத்தினர் பஞ்சமி நிலையங்களை வாங்கினால் செல்லாது

பஞ்சமி நிலங்களை மாற்று சமூகத்தினர் வாங்கியது செல்லாது, புகார் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆதிதிராவிட நல ஆணைய தலைவர் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்வாணன் தகவல்;

Update: 2025-03-27 18:00 GMT
.  மயிலாடுதுறையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாநில ஆணையத் தலைவர் தமிழ்வாணன் பேட்டி:-    மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாநில ஆணையத் தலைவர் முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ரூ.2.41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  கோடம்பாக்கம், திருநெல்வேலியில் மாணவர்களுக்கு இழைக்கப்பட்டதைப் போன்ற வன்கொடுமை பிற இடங்களில் நடக்காமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சலுகைகளை பெற்றுத் தர பரிந்துரைத்துள்ளோம். தூய்மை பணியாளர்கள் கையில் கிளவுஸ் இல்லாமல் இருப்பதும், பெண்கள் உடை மாற்றுவதற்கு இடம் இல்லாமல் இருப்பதும் கூட மனித உரிமை மீறல்தான். இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சிலர் ஆதாயத்துக்காக தவறாக பயன்படுத்த நினைக்கின்றனர். இதில் காவல்துறையினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.  ஒரு பிரச்னையில் ஜாதிய கண்ணோட்டத்தோடு செல்லாமல் அனைத்து சமுதாயத்தினரையும் ஒருங்கிணைத்து பேசினால் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.  பஞ்சமி நிலங்களை மாற்று சமூகத்தினர் வாங்குவது செல்லாது, புகார் தந்தால்  அது குறித்த ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.

Similar News