பங்குனி மாத தேய்பிறை பிரதோஷம் மயித ஆலயத்தில் நடைபெற்றது

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்:-  ;

Update: 2025-03-27 18:40 GMT
  • whatsapp icon
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்:-   மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெரிய கோவில் என்று அழைக்கப்படும் மாயூரநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட குற்றம் நீங்க உமையவள் அபயாம்பிகை மயில் உருவம் கொண்டு சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம் ஆகும். பல்வேறு சிறப்புகளையுடைய இக்கோயிலில் பங்குனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. கொடிமரம் முன்பு எழுந்தருளியுள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள்பொடி, திரவியபொடி உள்ளிட்ட பல்வேறு வாசனைதிரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் நந்திபகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

Similar News