ஸ்ரீகாமாட்சி வித்யாலயா பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி

தூத்துக்குடி ஸ்ரீகாமாட்சி வித்யாலயா மெட்ரிக் உயர் நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. ;

Update: 2025-03-28 05:55 GMT
ஸ்ரீகாமாட்சி வித்யாலயா பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி
  • whatsapp icon
தூத்துக்குடி ஸ்ரீகாமாட்சி வித்யாலயா மெட்ரிக் உயர் நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.  தூத்துக்குடி ஸ்ரீ காமாட்சி வித்யாலயா மெட்ரிக் உயர் நிலைப் பள்ளியில் "சுற்றுச்சூழல் நண்பன் வாழ்க்கை முறை" என்ற விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இணைய குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் கண்காட்சியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். முன்னதாக பள்ளி முதல்வர் மீனாகுமாரி வரவேற்றார்.  தேசிய பசுமை இயக்கம் கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜே. ஜோ பிரகாஷ், துவக்க உரையாற்றினார். பள்ளி நிர்வாகி ரோ.சி. அருணாசலம், என்டிஆர் அறக்கட்டளை ஜே. அர்னால்ட் அரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நிறைவாக பைரவி அறக்கட்டளை இயக்குநர் சி. ஷோபா நன்றி உரை வழங்கினார்.

Similar News