திமுக கவுன்சிலர்கள் அனைவருமே கூட்டத்திலிருந்து வெளிநடப்பு
இன்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் 7 வது வார்டு திமுகவை சேர்ந்த பேரூராட்சி கவுன்சிலரும் துணைத் தலைவருமான செல்வலட்சுமி வேண்டுமென்றே தனது வார்டு பகுதிக்கு அடிப்படை வசதி செய்யதரவில்லை என கூறி பிரச்சனை செய்து வருகிறார்.;
பெரம்பலூர் அருகே பூலாம்பாடி பேரூராட்சி மன்ற கூட்டத்திலிருந்து திமுக கவுன்சிலரை கண்டித்து ஆளும் கட்சியை சேர்ந்த திமுக கவுன்சிலர்கள் அனைவருமே கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பேரூராட்சியில் 15 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுகவை சேர்ந்த 12 உறுப்பினர்களும், அதிமுகவை சேர்ந்த இரண்டும் உறுப்பினர்களும், ஒருவர் சுயேட்சை உறுப்பினர்கள் உள்ளனர். பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த பாக்கியலெட்சுமி இருந்து வருகிறார். பூலாம்பாடி பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் சரியான முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் 7 வது வார்டு திமுகவை சேர்ந்த பேரூராட்சி கவுன்சிலரும் துணைத் தலைவருமான செல்வலட்சுமி வேண்டுமென்றே தனது வார்டு பகுதிக்கு அடிப்படை வசதி செய்யதரவில்லை என கூறி பிரச்சனை செய்து வருகிறார். இவரது செயல்பாடு பேரூராட்சி மன்றம் செயல்பாட்டுக்கும், ஆளும் கட்சியான திமுகவிற்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது என கூறி பேரூராட்சி கவுன்சிலர் செல்வலட்சுமியை கண்டித்து இன்று நடந்த பேரூராட்சி கூட்டத்திலிருந்து திமுக கவுன்சிலர்கள் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்ததால் பரப்பரபு எற்பட்டது.