தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மண்டல டிஎன்சிஎஸ்சி நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்தும், தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2025-03-28 19:09 GMT
  • whatsapp icon
மயிலாடுதுறை சித்தர்காட்டில் உள்ள நவீன அரிசி ஆலை முன்பு மயிலாடுதுறை மண்டல டி.என்.சி.எஸ்.சி நிர்வாக சீர்கேடு மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் முதுநிலை தரக்கட்டுப்பாடு மேலாளரைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர் முன்னேற்றச் சங்க மாவட்ட தலைவர் பொன்நக்கீரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பின்றி தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை மட்டும் முன்னுரிமை கொடுத்து இயக்கம் செய்திட வேண்டும், கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை இயக்கம் செய்யாமல், நிரந்தர கிடங்குகளில் இருந்து நெல் மூட்டைகளை இயக்கம் செய்வதை நிறுத்திட வேண்டும், முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரின் முறையற்ற ஆய்வுகளுக்கு எதிராக கொள்முதல் நிலைய ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது மாவட்ட நிர்வாகத்தின் முன்னிலையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை அமல்படுத்த வேண்டும், கொள்முதல் பருவம் நிறைவடையும் காலத்தில் தரஆய்வு என்ற பெயரில் கொள்முதல் பணியாளர்கள்மீது அதிகபட்ச பணப்பிடித்த ஆணை ஏற்படுத்தி கொள்முதல் பணியாளர்களின் நிரந்த பணிக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தும் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் உமாமகேஸ்வரியை உடனடியாக கன்னியாகுமரி அல்லது திருநெல்வேலி மண்டலத்திற்கு மாற்றம் செய்திட வேண்டும், பணி மாறுதலில் சென்ற முதுநிலை மண்டல மேலாளர் கோபிநாத் கொள்முதல் பருவத்தில் இடையில் முறையற்ற விதத்தில் வழங்கிய அனைத்து பணி மாறுதல் உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும், காளகஸ்திநாதபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறையற்ற தர பகுப்பாய்வினை மேற்கொண்டு முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் பிறப்பித்த அபராத தொகை ரூ.1,02,779 ரத்து செய்து ஏற்றுக்கொண்டபடி மறு பகுப்பாய்வு செய்து பட்டியல் எழுத்தர், உதவுபவர் இருவருக்கும் பணி வழங்கிட வேண்டும், கொள்முதல் நிலைய காலி பணியிடங்களை தாமதம் செய்யாமல் உடனடியாக நிரப்பிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஏiடியுசி சிஐடியு ஆகிய சங்கத்தினர் பங்கேற்றனர்.

Similar News