அதிமுகவை உறவாடி கெடுக்கப் பார்க்கிறது பாஜக

மயிலாடுதுறை அடுத்துள்ள நீடூரில் நடைபெற்ற இத்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமீமுன் அன்சாரி பேட்டி;

Update: 2025-03-28 21:56 GMT
  • whatsapp icon
மயிலாடுதுறை அருகே நீடூரில்   இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்; கலந்துகொண்ட   மனிதநேய ஜனநாயக கட்சியின்  மாநில தலைவர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: டாஸ்மாக் கடைகளில் முதல்வரின் படத்தை ஒட்டுவது வரம்பு மீறிய செயல். தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து இந்த ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. வட இந்தியாவில் மக்களிடையே வெறுப்பு அரசியலை உருவாக்கி பிளவுபடுத்தி வருகின்றனர்.  இதேபோல் தமிழகத்திலும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகதான் காலங்காலமாக சகோதரத்துவம் பண்பாடு ஓற்றுமையை பேணிகாக்கும் விதமமாக இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக இன்று தலைமைத்துவ பலகீனத்தால் சிக்கி சீரழிவதாக நாங்கள் கருதுகிறோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் பெரும்பாலான இடங்களில் தோல்வி அடைந்தோம் என தெரிவித்த அதிமுக, நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என அறிவித்தனர். 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி அறிவித்திருந்தார்.       தற்போது அவர்களுக்கு என்ன நேர்ந்தது என தெரியவில்லை. தற்போது சட்டமன்றம் நடந்து கொண்டுள்ள சூழலில் எதற்காக அமித்ஷாவுடன் ரகசிய சந்திப்பு?. ஒரு கட்சி யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது அக்கட்சியின் தலைமை எடுக்க வேண்டிய முடிவு. ஆனால் அதிமுகவை பொறுத்தவரை பாஜக உறவாடி அழித்து விடுவார்கள் என்ற கவலையில் தான் நாம் அதிமுகவை பார்க்கிறோம். ஏனென்றால் பாஜக தன்னுடன் இருந்த பல கட்சிகளை உறவாடி பலவீனப்படுத்தியிருக்கிறது.  கொள்கை ரீதியாக உடன் இருந்த சிவசேனாவையே இரண்டாக உடைத்து கபளீகரம் செய்த பாஜகவுக்கு அதிமுகவை அழிக்க  எவ்வளவு நேரம் ஆகும். மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. முடிந்தவரை தமிழகத்திற்கான நிதியை குறைத்தல், உரிமைகளை பலவீனப்படுத்துதல் உள்ளிட்ட முயற்சிகளை செய்து வருகிறது. தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவது தொடர்பாக அனைவரும் சாதாரணமாக இருந்த நிலையில் ஒரு நெருப்பை பற்ற வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது திமுக அரசு. அந்த கோபம் தான் அவர்களிடம் உள்ளது. அதனால்தான் நிதியை குறைத்து வருகிறார்கள்.  அரசியல் வேறு நிர்வாகம் வேறு நிர்வாகத்திற்கான நிதியை தடையின்றி வழங்க வேண்டும். அதற்கு எதிராக திமுக போராடினால் எங்களது ஆதரவும் உண்டு. தேவைப்பட்டால் நாங்களும் இணைந்து போராடுவோம் என தெரிவித்தார்

Similar News