ஜெயங்கொண்டம் முதல் அரியலூர்,குன்னம்,பெரம்பலூர்,சேலம் வழியாக பெங்களூருக்கு அரசு பஸ் சேவை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

ஜெயங்கொண்டம் முதல் அரியலூர்,குன்னம்,பெரம்பலூர்,சேலம் வழியாக பெங்களூருக்கு அரசு பஸ் சேவை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தொடங்கி வைத்தார்.;

Update: 2025-03-29 16:40 GMT
ஜெயங்கொண்டம் முதல் அரியலூர்,குன்னம்,பெரம்பலூர்,சேலம் வழியாக பெங்களூருக்கு அரசு பஸ் சேவை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • whatsapp icon
அரியலூர் மார்ச் 29- அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஜெயங்கொண்டம் முதல் அரியலூர்,குன்னம்,பெரம்பலூர்,சேலம் வழியாக பெங்களூர் வரை செல்லும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக புதிய வழித்தட பேருந்து சேவையினை, ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன்,அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா,அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன், ஜெயங்கொண்டம் நகர்மன்ற துணைத்தலைவரும், நகரக் கழகச் செயலாளர் வெ.கொ.கருணாநிதி, அரசு அலுவலர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள், அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட தொமுச தோழர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.

Similar News