கூவத்தூரில் நடைபெற்ற மு க ஸ்டாலின் பிறந்த நாள்விழா பொதுக்கூட்டத்தில் திருடனைப் போல் நமது பணத்தை திருடிக் கொண்டு வட மாநிலங்களுக்கு ஒன்றிய மோடிஅரசாங்கம் கொடுப்பதாக குற்றச்சாட்டு
கூவத்தூரில் நடைபெற்ற மு க ஸ்டாலின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் திருடனைப் போல் நமது பணத்தை திருடிக் கொண்டு வட மாநிலங்களுக்கு ஒன்றிய மோடி அரசாங்கம் கொடுப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் குற்றம் சாட்டினார்;

அரியலூர், மார்ச் 30- ஆண்டிமடம் அருகே கூவத்தூரில் நடைபெற்ற மு க ஸ்டாலின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் திருடனைப் போல் நமது பணத்தை திருடிக் கொண்டு வட மாநிலங்களுக்கு ஒன்றிய மோடி அரசாங்கம் கொடுப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் குற்றம் சாட்டினார். அரியலூர் மாவட்ட திமுக சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கூவத்தூர் கலைஞர் திடலில் ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். முன்னதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டேவிட் வரவேற்று பேசினார். திமுக தலைமை கழக பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். சென்னையில் நடைபெற்ற வழிப்பறி சம்பவத்தை உதாரணமாக கூறிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வேட்டி சேலை அரிசி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அப்போது வேலை கேட்டு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளியிடம் வேலைக்கான அறிவிப்பு வரும்போது விண்ணப்பியுங்கள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என வாஞ்சையுடன் மாற்றுத்திறனாளியிடம் அமைச்ச சிவசங்கர் கூறினார் கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பேசும்போது நமது முதலமைச்சர் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் அது சரியாக நடக்க கூடாது என்று மோடி தலைமையிலான ஆட்சி எவ்வளவு இடைஞ்சல் கொடுத்துட்டு இருக்கான் நாளை நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போராட்டம் நடைபெற உள்ளது போராட்டம் எதற்கு என்றால் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான பணத்தை ஒன்றிய அரசு முறையாக கொடுக்காததை கண்டித்தும் கொடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெறுகிறது நூறு நாள் வேலை வந்த பிறகு ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களுக்கு வசதி வாய்ப்பாக அமைந்தது தற்போது அந்தத் திட்டத்தையும் நிறுத்துவதற்கான முயற்சியில் மோடி இறங்கி இருப்பதை கண்டித்து தான் நாளை போராட்டம் நடைபெற உள்ளது நாம் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு பொருளுக்கும் வரி கொடுக்குறோம் ஒரு டீ குடித்தால் பாலுக்கு வரி டீத்தூளுக்கு வரி சர்க்கரைக்கு வரி என பல்வேறு விதங்களில் வரிகளை போட்டு ஜி எஸ் டி என்ற பெயரில் மோடி அரசாங்கம் எடுக்கிறது தமிழ்நாட்டில் வசூலான பணத்தை நமக்கான பணத்தை பங்கு கொடுக்க வேண்டும் மீதியை வைத்து மத்திய அரசு நிர்வாகத்தை நடத்த வேண்டும் ஆனால் நாம் ஒரு ரூபாய் வரி கொடுத்தால் 29 காசுத்தான் தருகிறார்கள் மீதி 71 காசை மத்திய அரசு வைத்துக் கொண்டு பாஜக ஆளக்கூடிய மாநிலங்களுக்கு கொடுக்கிறார்கள் நம்ம கொடுக்கிற வரிப்பணத்தை எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டு போகும் ஆட்சியாக தான் இன்றைக்கு மோடி அரசு உள்ளது திருடுபவர்கள் வயிற்றுப் பசிக்காக திருடுகிறார்கள் இதைதான் ஒன்றிய மோடி அரசாங்கம் பண்ணுகிறது நமக்கு வரவேண்டிய பணம் வரவில்லை நம்மிடம் வசூல் செய்கிற பணத்தில் நமக்கான பணத்தை தருவதில்லை மீண்டும் நம்மீது இந்தியை திணிக்க முயற்சிப்பதற்கான காரணம் என்னவென்றால் எல்லோரும் இந்தி படிக்க வேண்டும் என்று கட்டாயம் வந்தால் இந்தியை தாய் மொழியாக கொண்டவன் நம்மை விட அதிக மார்க் எடுப்பான் நம்மால் வர முடியாது அவனுக்கு எல்லா வேலையும் கொடுத்து விடுவான் இப்போது தமிழகத்தில் பல்வேறு வங்கிகளில் இந்தி படித்தவர்கள் தான் வேலையில் இருக்கிறார்கள் இதே நிலைமை நீடித்தால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் இந்தி படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் சூழல் ஏற்பட்டு விடும். இத்திட்டம் தான் தற்போது மோடி வைத்துள்ள திட்டம் எனவே தான் தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்தை எதிர்த்து வருகிறார் என பேசினார் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் இளம் பேச்சாளர் மோகன், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், திமுக சட்டத்திட்ட திருத்த குழு இணை செயலாளர் சுபா சந்திரசேகர், சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் கலாசுந்தரமூர்த்தி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தர்மதுரை, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கே.சி.லூயிகதிரவன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் டிஎம்டி அறிவழகன், மாவட்ட மேலிட ஒன்றிய மேற்பார்வையாளர் ரவிக்குமார் உள்ளிட்ட மாவட்ட அணி நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி பிரதிநிதிகள், ஒன்றிய அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட பிரதிநிதியும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான சேவியர் சஞ்சீவிகுமார் நன்றி கூறினார். .