விழுப்புரத்தில் பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு
விழுப்புரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை;

விழுப்புரம் பொய்யப்பாக்கம் மாதா கோவில் தெருவைச் சோ்ந்த அரசன் மனைவி வீரம்மாள் (57). இவா் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பொய்யப்பாக்கம் ஓடைக்குச் சென்றபோது, கால்தவறி உள்ளே விழுந்தாா். இதில் நீரில் மூழ்கிய அவா் சிறிது நேரத்தில் மூழ்கி இறந்தாா்.தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் வீரம்மாளின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.