இந்தியாவில் இதுவரை இருந்த பிரதமர்கள் யாரும் செய்ய துணியாததை மோடி செய்ய துடிக்கிறார் - மோடியின் பாஜக கட்சி இவ்வளவு கேவலமான காரியத்தில் இறங்குவதாக அமைச்சர் குற்றச்சாட்டு.
ஆண்டிமடம் அருகில் அழகாபுரத்தில் நடைபெற்ற ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் இந்தியாவில் இதுவரை இருந்த பிரதமர்கள் யாரும் செய்ய துணியாததை மோடி செய்ய துடிக்கிறார் - மோடியின் பாஜக கட்சி இவ்வளவு கேவலமான காரியத்தில் இறங்குவதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் குற்றம் சாட்டி பேசினார்.;

அரியலூர், மார்ச்.30- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அழகாபுரம் கிராமத்தில் ஆண்டிமடம் ஒன்றிய திமுக சார்பில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பொதுக்கூட்டத்திற்கு ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரெங்கமுருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் ராமதாஸ் வரவேற்று பேசினார். தலைமை கழக பேச்சாளர் திருச்சி எழில்மாறன் செல்வேந்திரன், இளம் பேச்சாளர் தினகரன் மற்றும் மாநில சட்ட திட்ட குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க. கண்ணன் ஆகியோர் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து பேசினர். தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சிறப்புரையாற்றி பேசும்போது நமது உரிமைகளை கேட்பதற்கு மோடி அரசாங்கத்துடன் போராட வேண்டி உள்ளது இதற்கு முன்னாடி எத்தனையோ பிரதமர்கள் இருந்துள்ளார்கள் எந்த பிரதமரும் செய்யத் துணியாததை மோடி செய்ய துடித்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு மாநிலங்களாக இருந்ததை ஒரே நாடாக மாற்றினார் ஆனால் இதை சீர்கெடுக்கின்ற முயற்சியில் மோடி இறங்கி இருக்கிறார் பிஜேபிகாரன் கையெழுத்து வாங்க வரான் மோடி கட்சி தாமரை படத்தோட வருவான் எதற்கு கையெழுத்து வாங்க வருகிறார்கள் என்றால் மும்மொழி கொள்கை வேண்டும் என கையெழுத்து வாங்க வருகிறான் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினால் மக்கள் கேள்வி கேட்பார்கள் என மக்களிடம் வராமல் பள்ளிவாசலில் நின்று கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்து மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாக கையெழுத்து வாங்குகிறான் பிஸ்கட் வேண்டாம் கட்சியும் வேண்டாம் என ஓடுகிற குழந்தைகளையும் இழுத்துப் பிடித்து கையெழுத்து வாங்குவதை டிவியில் பார்க்க வேண்டிய நிலைமைக்கு வந்திருக்கு மோடியோட கட்சி. இப்படிப்பட்ட கேவலமான காரியத்தில் இறங்கி இருக்கிறது மோடியோட கட்சி. இன்று காலை தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் போராடியுள்ளோம் 4000 கோடி ரூபாய் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான பணத்தை மத்திய அரசு இதுவரை தரவில்லை அந்த திட்டம் தமிழ்நாட்டில் கருணாநிதியின் முதலமைச்சராக இருந்தபோது சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி டெல்லியில் ஆட்சி புரிந்த போது கொண்டு வந்த திட்டம் கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தினந்தோறும் வேலை வாய்ப்பு உறுதி செய்யவும் வருடத்தில் 100 நாளாவது வேலை தர வேண்டும் என கொண்டுவந்த திட்டம் இன்றைக்கு அந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டிற்கு நர வேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றுகிறார் மோடி. போகிற போக்கில் 100 நாள் வேலையே இல்லாமலாக்குவது தான் மோடியின் திட்டம். இந்த பணம் எங்கே போகிறது என்று கேள்வி வரும் இந்த பணம் எல்லாம் அம்பானி அதானிக்குதான் போகிறது. இவர்கள் நம்மூர் பேங்கில் லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கினால் 40 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்து கொடுத்திருக்கிறார் மோடி. இந்த பணம் எல்லாம் நம்ம கொடுக்கிற வரிப்பணம். இவ்வாறு மோடி செய்கின்ற காரணத்தினால் அம்பானி அதானி இருவரும் இந்தியாவில் 100 பணக்காரர்கள் இருந்தால் 101, 102 வது பணக்காரர்களாக இருந்தவர்கள் தற்போது உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் இரண்டு இடத்திற்கு வந்துள்ளார்கள் இப்படி ஏழைகளின் வயிற்றில் அடித்து பெரிய பணக்காரர்களை வளர்க்கின்ற காரணத்தினால்தான் மோடி அரசாங்கத்தை நாம் எதிர்க்க வேண்டும், நமது மக்களின் உரிமைகளை காக்க வேண்டும் என போராட வேண்டிய இடத்தில் நாம் இருக்கின்றோம் அப்படி போராடுகின்ற முதல் தலைவராக இருப்பவர் திமுக தலைவரும் முதலமைச்சர் தலைமையில் மோடி அரசை வீழ்த்த வேண்டும். மோடி கூட்டணி மோடி கம்பெனி தமிழ்நாட்டில் நுழையாமல் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.பொதுக்கூட்டத்தில் சட்டமன்றத் தொகுதி மேற்பார்வையாளர் கலா சுந்தரமூர்த்தி மாவட்ட பார்வையாளர் கருப்புசாமி பேரூர்செயலாளர் அல்போன்ஸ், பேரூராட்சி தலைவர் மார்கிரேட், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கே.சி.லூயிகதிரவன் உள்ளிட்ட திமுகவின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அனைத்து அணி பொறுப்பாளர்கள் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் டெல்லியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வென்ற 3 மாணவிகளுக்கு ஊக்கத் தொகையாக தல 3 ஆயிரம் ரொக்கம் வழங்கினார்.